Category: செக்ஸ் தகுதி டெஸ்ட்
முதல் இரவு – ஆண் செக்ஸ் படம் பார்த்த அனுபவம் உதவுமா? பெண்ணுக்கு செக்ஸ் செய்ய தெரியுமா? ஏன் அவசரம்?
இயற்கை கருத்தரிப்பு அடைய ரகசியங்கள், செக்ஸ் என்றால் என்ன ?விந்தணு நல்ல இருந்தும் ஏன் கர்ப்பம் இல்லை?
பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அவர்களுடைய ஹார்மோன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பின் அவர்கள் பெரும் செக்ஸ் இன்பம் அவர்களை கர்ப்பத்துக்கு தகுதி ஆக்குகிறது. திருமணம் ஆனவுடன் பல காரணங்களால் தம்பதியர் குழந்தை அதை தள்ளி வைக்கின்றனர். அதனால் அவர்கள் முழுமையான செக்ஸ் இன்பம் அடைவது இல்லை. இதன் காரணமாக ஆணும் பெண்ணும் முறையான கவர்ச்சி இல்லாமையால், அது இருந்தும் முழுமையான உடலுறவில் திருப்தி கிடைக்காததால் அவர்கள் இருவருடைய உடலும் மாற்றம் அடைய ஆரம்பிக்கின்றன. மெதுவாக அவர்களுடைய இனக்கவர்ச்சி குறைந்து, பிள்ளை பெறும் ஆசை கவலையாக மாறி அவர்களுடைய வாழ்க்கையை திசை மாற்றுகிறது. இதனால் பெண் அதிகமாக பாதிக்கப்பட்டு கர்ப்பம் அடைவது இயலாமல் போகிறது. இவர்கள் தன்னுடைய பிரச்சனை கர்ப்பம் அடைவதில் தான் இருக்கிறது என்று கரு உருவாக்கும் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது சரியான உடலுறவு இல்லாததால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால். இதை புரிந்து கொண்டு சரியான செக்ஸ் மருத்துவரை பார்ப்பது இயற்கை கர்ப்பத்துக்கு வழிவகுக்கும். திருமணமாகி ஒரு மாதத்தில் முறையான உடலுறவு நடந்திருக்க வேண்டும். உடலுறவு என்றால் என்ன? ஆண் உறுப்பு முழுமையாக பெண் உறுப்புக்குள் சென்று, இயங்கி, இன்பத்துடன் விந்து வெளிப்படுவது. இதன் மூலம் பெண் இன்பம் அடைவது. இதுதான் முறையான உடல் உறவு. இதை தவிர்த்து பலவிதமான மாற்றங்களை கொண்ட உடலுறவு இன்பத்தை ஆணும் பெண்ணும் ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது இருவருடைய உடலுறவு தகுதியும் ஆரோக்கியமும் மாறிவிடுகிறது. அதனால் விந்து கருப்பைக்குள் முன்னேறி முட்டையை அடைவதில் பல சிரமங்களை மேற்கொள்கிறது. இதனால் கர்ப்பமாவது சிரமம் ஆகிறது. இதைப் புரிந்துகொள்ள எந்த தம்பதியும் தயாராக இல்லை. அப்படியே அதைப் பற்றி நாம் சொன்னாலும் அவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் அவசரத்திலே இயல்பான வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இதனாலே செயற்கை கர்பம் தரும் சிகிச்சை மையங்களை அவர்கள் அதிகம் நாடுகின்றனர். இதிலிருந்து நீங்கள் உங்களை இயற்கையான வழியில் மாற்றிக் கொள்ள விரும்பினால் திருமணமாகி உடலுறவு சரியாக இருக்கிறதா என்று அறிந்துகொள்ள அருகில் உள்ள பெண் மருத்துவரை பாருங்கள். அதில் சிரமம் இருப்பின் எங்களைப்போன்ற சிறப்பு மருத்துவர்களை அணுகுங்கள். திருமணமாகி ஒரு வருடத்துக்குள் கர்ப்பம் ஆவது அனைவருக்கும் அவசியமாகிறது. இதற்கு பெண் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு தன்னுடைய கணவன் உடன் சேர்ந்து மருத்துவரிடம் செல்ல வேண்டும்.