ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம்

முந்தி விந்து வந்தால் என்ன ?

 தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு (Divorce ) காரணம் ஆகிவிடுகின்றது.
தன் துணையை திருப்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculation எனப்படுகிறது. தமிழிலிலே சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடையும்  முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , விந்து  வெளியேற்றி விடுதல்.
இவ்வாறு பெண் உச்ச நிலை அடையும் முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.

உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?

இல்லை
இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?

இது உடல் ரீதியாக உள்ள சில பிரச்சினைகள் , மனம் சம்பந்தப்பட்ட பலவீனம் பயம் இவற்றால் உண்டாகிறது . ஆணிடம்  ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.

இதனாலேயே உறவில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்களால்    இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடிகிறது . தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்து இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இருந்து  விடுகிறார்கள்.

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

இல்லை
சுய இன்பத்தில்  இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி  தங்களால் தன் துணையை திருப்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள். சிலருக்கு அதிக சுய இன்பத்தால் பலவினமடைந்த ஆணுறுப்பின் திசுக்கள் விரைந்த விந்து வெளியேற்றத்துக்கு காரணமாகிறது.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை.

முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே உடலுறவை  நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் காதல் விளையாட்டுகளில்  ஈடுபட்டு  உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. இதன் போது ஆணுறுப்பிலே தொடுவதை   இறுதிவரை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.

இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி Sexologist  ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.
இதற்க்கு அருமையான மருந்துகள் நம் பாக்யா sexology   சென்டரில் கிடைக்கும் .

பெண்களின் உச்சகட்டம், PENIS,சுய இன்பம்,Masturbation,ஆண்மைசக்தி,ஆண் குறி,அந்தரங்கம்,orgasm,பாலியல் சந்தேகங்கள்,செக்ஸ் ஹார்மோன்,செக்ஸ் கல்வி-பயிற்சிகள்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s