ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம்

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?

இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.
உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.ஆண் உறுப்பின் விறைப்பு  நிலை
 
1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயாளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
c.புராஸ்ரேட் நோய் முதுகுத்  தண்டு நோய் ஆகியவற்றிற்கான சிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிட்ரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
 
பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
a.திடீரெனத் தோன்றுவது,
b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
 
a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.

 

டாக்டர்.எம்.கே.முருகானந்தன் க்கு நன்றி.

 

டாப்ளர்,வாக்யும் பரிசோதனை மூலம் உங்கள் ஆண் உறுப்பு நிலை ஆராச்சி செய்யப்படும்.

ஆண் உறுப்பு பெரியது,   ஆண் உறுப்பு படம்,  ஆண் உறுப்பு,  ஆண் உறுப்பு வளர்சசி,  ஆண் உறுப்பு அமைப்பு,  ஆண் உறுப்பு குறிப்புகள்,விந்து முந்துதல்,உடல் உறவு சக்தி,
ஆண்மைக்கு மருந்து,பெரிய ஆண் உறுப்பு,ஆண்மைக் குறைவு ,sex doctor in coimbatore,poor penis size,       

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s