ஆண் செக்ஸ் · செக்ஸ் தகுதி டெஸ்ட்

திருமணம் இப்போ வேண்டாம்

இது நம்ம தமிழ் நாட்டுக்கு மட்டும்தான் !

“திருமணம் இப்போ வேண்டாம் ” என்று சொல்லுகிறதா உங்கள் பிள்ளை ?

பிள்ளைகள் நடவடிக்கை, பேச்சு, நண்பர்களுடன் பேசுதல், பார்க்கும் டிவி, சினிமா ,அதிக கடவுள் நம்பிக்கை, பூஜை, விரதம், பெண்களை/ ஆண்களை கண்டால் கூச்சம், இதெல்லாம் கவனிக்கப் பட வேண்டும் .திருமணம் வேண்டாம் என்று ஆணோ பெண்ணோ சொன்னால் முதலில் ரகசியமாக கவனியுங்கள்.அதன் காரணத்தை கேள்வி கேட்டு கண்டுபிடிக்க முடியாது .எப்போதும் நமக்கு வெளிப் படையாக பேசி பழக்கம் இல்லையே.கருத்து சுதந்திரம் நாம் தர வில்லையே.காதல் உண்டா ? இல்லை திருமண பயமா? செக்ஸ் நாட்டம் இல்லை என்று சொல்வது 10% உண்மை. அவர்களுக்கு

  1. செக்ஸ் தகுதி, ஆரோக்யம்  இல்லை என்று நினைக்கலாம். ஆண்களுக்கு, தான் ஆண்மை குறைந்தவன் என்று எண்ணம் இருக்கலாம்.
  2. பெண்கள் ஆண்களை பற்றி தவறான கணோட்டம் கொண்டிருக்கலாம்.
  3. செக்ஸ் பயம், தான் இந்த வேலைக்கெல்லாம் ஒத்துவர முடியாது என்ற எண்ணம் .இது பிற பெண்கள் செக்ஸ் பற்றி பேசும் பயங்கர அனுபவங்களை பொருத்து உண்டாகும்.
  4. அதீத கடவுள் பக்தி .செக்ஸ் அதற்க்கு எதிரான செயல் என்ற எண்ணம்.
  5. தன் உணர்வு என்னும் ego வை தளர்த்தி ஆணுடன் பெண் செக்ஸ் உறவில் ஈடுபட  இயலாத அளவு ஒரு வைராக்கியம் ,மன உறுதி.
  6. காதல் என்னும் உறவில் கலந்திருப்பதால் அதை வெளிப் படுத்தி திருமணம் செய்ய தயக்கம், பயம்.
  7. வேறு ஒரு துணை செக்ஸ் உறவில் அடிமைப் படுத்தி, ஏமாற்றி, மிரட்டிக் கொண்டிடுக்கலாம். பல துணைகள் தான் தற்கொலை செய்வேன், இந்த உறவை வெளிப் படுத்தி வாழ்வை நாசம் செய்வேன் என்று பல விதமாக மிரட்டலாம். இதை வெளிப் படுத்தி இந்த துன்பத்திலிருந்து வெளியேற தெரியாமல், முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கலாம் .

இப்படி பல. இந்த மாதிரி எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

உங்கள் பிள்ளை  எதனால் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கவனிக்கவும். தக்க மருத்துவ ஆலோசனை பெற்று தெளிவு பெறவும். கோடிகளை செலவழித்து , அடுத்த வீட்டு ஆட்களுடன் உறவு கொண்டாடி, ஊரைக் கூட்டி செய்யும் திருமணங்கள் பல பொடி பொடியாய் உதிர்ந்து போவது இதனால்தான். உங்களுக்கு காதல் திருமணம் ஒத்து வராது என்றால் அதை முதலிலே பிள்ளையிடம் சொல்லுங்கள். அதற்க்கு மேல் காதல் உங்கள் வீட்டுக்குள் வந்தால் வரவேற்கிறதும் உங்கள் விருப்பம். அவள் இல்லாமல் நான் இல்லை என்று உயிருடன் இணைந்த தம்பதிகளை (? நிறைய பேர் பதிவு திருமணம் செய்து வாழ்கிறார்கள் .உஷார் ) பிரிப்பது அவசியமா என்றும் யோசியுங்கள். அப்படி பிரித்து செய்யும் திருமணத்தில் ஒட்டாது நிற்கும் அந்த இன்னொரு நபரின் நிலை கவலைக்கிடம். எதையும் யோசித்து முடிவெடுங்கள். உங்கள் பிள்ளை மட்டுமல்ல, இந்த திருமணத்தில் பாதிக்கப் படுவது இன்னொரு குடும்பமும்தான் !

உண்மையாக திருமண நாட்டம் இல்லாதவர்களை ஆலோசனைக்கு  அழைத்து செல்லுங்கள், நல்ல மருத்துவரிடம் !

கொஞ்சம் யோசியுங்கள் பெற்றோர்களே !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s